
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ”பிப்ரவரி 24ஆம் தேதி”’ பிறந்த தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் நலத்திட்ட உதவிகள், அதேபோன்று பட்டித்தொட்டி எல்லாம் ஏழை – எளிய மக்களுக்கு எல்லாவிதமான நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற வகையிலே,
இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா பேரவை சார்ந்த மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், ஆற்றல்மிக்க என்னுடைய பாசத்துக்கும், அன்பிற்குரிய இனிய சகோதரர்… எந்த ஒரு பணியையும் சரி, ஒரு கடமை உணர்வோடு…. அர்ப்பணிப்பு உணர்வோடு நேர்த்தியாக அந்த பணியை செய்யக்கூடிய பாசமிகு சகோதரர், முன்னாள் அமைச்சர்,அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி உதயகுமார் அவர்களின் தலைமையில் இன்றைக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்று.
அதிலேயே நம்முடைய தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கள், அதேபோன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதேபோன்று இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கூட பங்கு பெற்று தங்களுடைய கருத்துக்களை எல்லாம் தெரிவித்தார்கள். குறிப்பாக தீர்மானங்கள் இந்த ஆட்சி பொறுப்பெற்று கிட்டத்தட்ட விடியாத ஆட்சி பொறுப்பேற்று 30 மாத காலத்தில் மக்கள் படுகின்ற அவலங்கள், அதையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லியாக வேண்டும் என தெரிவித்தார்.