
மஹாராஷ்டிராவின் தானே (Thane) நகரத்தில், நாய் ஒன்று வாலிபரை கடித்ததால் அதன் உரிமையாளர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 14 ஆம் தேதி, 45 வயதான ஒரு நபர் தன் வீட்டின் முன் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை அண்டை வீட்டுக்காரரின் நாய் கடித்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் நாய் உரிமையாளரிடம், “உங்கள் செல்லப்பிராணியை கட்டுப்படுத்துங்கள்” என்று எச்சரித்தார். அப்போது அவர் கூறியதை கேட்டு கோபமடைந்த நாயின் உரிமையாளர் அவருடன் தகராறில் ஈடுபட்டார்.
இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் நாயின் உரிமையாளர் அந்த நபரை திடீரென கிரிக்கெட் பேட்டால் கடுமையாக தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாயின் உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி கபுர் பவுடி காவல் துறையினர் நாயின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.