
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், மாளிகை பற்றிக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல….. இன்றைக்கு இந்த அரசு மக்கள் வெள்ளத்தால் பாதித்துக் கொண்டிருக்கும் போது….. பட்டத்து இளவரசர் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு தேவை கார் ரேஸ்….
யார் வீட்டு பணம் ? உன் பணத்துல நடத்தினால் பரவாயில்லை…. உன் சொந்த இடத்துல பண்ணுனா பரவாயில்லை… நல்ல சாலையை இடித்துவிட்டு, இந்த அரசு நடத்துகிறது. இதில் என்ன ஒரு அவலம் என்றால் ? இதுவரை தமிழகத்திலே இதை எதிர்த்து கண்டன குரல் எழுப்பியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் மட்டும் தான் இதுவரை கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இன்றைக்கு அனைத்து ஊடகங்களும் சரி… பத்திரிகைகளும் சரி…. மற்ற கட்சிகளும் சரி…. இதைப்பற்றி வாய் திறக்கவில்லை… குறிப்பாக நீதிமன்றத்திலே இந்த வழக்கு வந்த போது…. மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவம், கடற்படை, துறைமுகத்திடம் அனுமதி பெற்று விட்டீர்களா ? என்று சொன்னபோது… அவர்கள் கூட்டத்திலே கலந்து கொண்டார்கள்….
நீங்கள் அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஒத்தி வைத்தது…. 24 மணி நேரத்துக்குள்ளாக மத்திய அரசாங்கத்திடம் இருந்து அந்த அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததாக சொல்லி இருக்கிறார்கள்… இதுதான் முதலில் இருந்தே சொல்றேன்…. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் ரகசியமாக ஒரு உறவு இருக்கிறது என்று நான் முதலில் சொன்னேன் என தெரிவித்தார்.