
தமிழ்நாட்டில் உள்ள எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள மாணவ, மாணவிகள் மிகுந்த அன்போடு நமது முதலமைச்சரை ‘அப்பா’, ‘அப்பா’ என்று உரிமையோடு அழைக்கின்றார்கள். அதுமட்டுமின்றி முதலமைச்சர் கூட நேற்று முன்தினம் கூறினார். தமிழ்நாட்டு மாணவர்கள் என்னை அப்பா என்று கூப்பிடும் போது எனக்கான பொறுப்பு இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது.
இன்னும் அவர்களுக்கு நான் நிறைய திட்டங்களை தர வேண்டும் என்ற உத்வேகம் உருவாகியுள்ளதாக கூறினார். ஆகவே தந்தையாக இருந்து உங்களுக்கான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்துவார். உங்கள் வீட்டில் உள்ள அண்ணனாக நானும் என்றும் துணை நிற்பேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.