கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரிடம் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த  சாந்தகுமார் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால் பாலாஜி மூங்கில்துறைபட்டு காவல் நிலையத்தில் பணத்தை மீட்டு தரக்கோரி சாந்தகுமார் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சாந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சாந்தகுமார் அரசு பணி வாங்கித் தருவதாக கூறி அப்பகுதியில் உள்ள பலரையும் ஏமாற்றி ரூபாய் 26 லட்சத்து 70 ஆயிரம் வரை மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் அந்த மோசடியில் ஈடுபட்ட சாந்தகுமாரை திருக்கோவிலூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.