
சென்னையில் நடந்த கோர சம்பவத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் மோசடி மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. காதலன் முகமது யாசின் மியாவின் உதவியுடன் இளம் பெண் மற்றும் அவரது சகோதரின் மனைவியுடன் திரிபுரா மாநிலம் வழியாக சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளார். சென்னையில் வேலை வாய்ப்பு கொடுப்பதாக நம்பிய இளம்பெண், பாலியல் புரோக்கர்களிடம் ரூ. 40 ஆயிரத்திற்கு விற்கப்பட்டுள்ளார்.
வேளச்சேரி போலீசார் கிட்டத்தட்ட 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த குற்றச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். வீட்டில் சோதனை நடத்தியபோது, இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, காதலன் முகமது யாசின் மியா உட்பட குற்றத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த பாத்திமா, ரும்கி, மற்றும் பாலியல் புரோக்கர்கள் ஹபில், ஜோஷித் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.