தஞ்சை மாவட்டம் அகிலாங்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் காளையை அடக்கினால் ரூபாய் 200 தருகிறேன் என்று காளையின் உரிமையாளர் பள்ளி மாணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய மாணவர் ஜல்லிக்கட்டு காளையை அடக்க சென்றுள்ளார். அப்போது காளை முட்டி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.