
மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்தம் மசோதா நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நான் எதிர்க்க மாட்டேன் என்று கூறிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக செய்யும் சதியை எதிர்பாவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, மசோதா மீதான பாஜகவின் மோசடி, சொத்துக்களை அபகரித்து அவர்களுடைய தொழிலதிபர் நண்பர்களுக்கு கொடுக்கும் சதியை நாங்கள் எதிர்க்கின்றோம். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முஸ்லிம்கள் மீது காட்டும் அக்கறை முகமது அலி ஜின்னாவை அவமானப்படுத்தும்.
பாஜக 3-வது முறையாக மத்தியில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்து முஸ்லிம் பிரச்சனையை எழுப்புகிறது. முஸ்லிம்களை விரும்பவில்லை என்றால் பாஜக அதன் கொடியில் உள்ள பச்சை நிறத்தை அகற்ற வேண்டும் என்றார்.