தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் இளங்காலப்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். சதீஷ்ககுமார் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு அகிலேஷ் என்ற மூன்று வயது சிறுவன் இருந்துள்ளார். ஒரு மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் ஐஸ்வர்யா குழந்தை பிறந்ததால் பெரும்பாலை அருகே எட்டக்குழி கிராமத்தில் தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். எட்டக்குழி கிராமத்தில் குடிநீர் வசதிக்காக டேங்க் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த டேங்கிற்கு பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனை சரி செய்ய பழுதுபார்ப்பவர் அந்த மோட்டரை கழட்டி சென்றுள்ளார். ஆனால் அதனை பொறுத்திருந்த மின் கம்பிகளை துண்டிக்காமல் ஆங்காங்கே விட்டு சென்றுள்ளனர்.

மின்சாரம் பாயும் என தெரியாத சிறுவன் அந்த மின்கம்பிகளை விளையாட்டாக தொட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி அந்த சிறுவனை தூக்கி எறிந்தது.  இதில் சம்பவ இடத்திலேயே அகிலேஷ் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பெரும்பாலை காவல்துறையினர் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றர். மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.