
பிரதமர் மோடி இன்று முத்ரா போஜனா பயனாளிகளிடம் கலந்துரையாடினார். இதற்காக முத்ரா போஜனாவின் பயனாளிகள் பிரதமரின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த முத்ரா போஜனாவின் 10 ஆண்டுகள் நிறைவொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பயனாளிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது அவர் ஒரு பயனாளிகளிடம் உங்களது வருமானம் எவ்வளவு? என்று கேட்டார்.
இதற்கு பயனாளி தயங்கினார். இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது நிதி அமைச்சர் என் அருகில் தான் இருக்கிறார். நான் அவரிடம் கூறுகிறேன். பயப்படாதீர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் வரமாட்டார்கள் என்று கிண்டலாக கூறினார். இதற்கு அங்கிருந்த அனைத்து பயனாளிகளும் சிரித்தனர். இதையடுத்து அந்த பயனாளி தனது மாத வருமானம் 2.5 லட்சம் என்று தெரிவித்தார்.