பிரபல யூடியூப்பரான டிப.டி.பிஎப் வாசன்காஞ்சிபுரம் அருகே வேகமாகவும்,  கவனக்குறைவாகவும்,  அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்ட வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜாமீன் மனு ஏற்கனவே கிழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வ கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது,  கால்நடைகள் சாலையை  கடந்ததால், திடீரென பிரேக் போட்டதால்தான் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும, பிரேக் போடாமல் இருந்திருந்தால் தனக்கும்,  கால்நடை உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும்,  நான் ஒரு அப்பாவி என்றும்,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

அதே சமயம் காவல்துறை தரப்பில், இவர் யூ டியூபில் 45 லட்சம் பேர் இவரை பின்தொடர்கிறார்கள்.  20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை ஓட்டுகிறார்.  2 முதல் 4 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் உயிர் தப்பி இருக்கிறார். இல்லையென்றால் அவரது உயிர் இறந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்கள். இவரைப் பார்த்து மற்ற இடங்களில் பெற்றோரிடம் விலை உயர்ந்த பைக்குகளையும் கேட்டு பெறுவதாகவும், இது போன்று  வேகமாக செல்கின்ற வாகனங்களால் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ காரணங்கள் கூறி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாசன் தரப்பில் வைத்த கோரிக்கை நிராகரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன்,  அவருக்கு மருத்துவ சிகிச்சையை சிறையில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். விளம்பரத்திற்காகவும், மற்றவர்களை தூண்டும் வகையில் செயல்பட்ட மனுதாரர்,  மற்ற இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என கூறிய நீதிபதி, அவர் நீதிமன்ற காவல் நீட்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

அதே சமயம் இவரின் youtube தளத்தை மூடிவிட்டு,  பைக்கை எரித்துவிட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடும்படி அறிவித்துருக்கிறார்.  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றிவிட்டு மீண்டும் ஜாமீன் வருகிறாரா ? அல்லது  நிகழ்கால செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்து,  மீண்டும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாட இருக்கிறாரா ? என்பது ஓரிரு, வாரங்கள் தெரியவரும்.