அரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் பகுதியில் சப்ரா மருத்துவமனை உள்ளது. இங்கு ஐசியூ வார்டில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை ஆண் ஒருவர் வயிற்றில் குத்தியுள்ளார். அதாவது அந்த அறைக்கு வரும் ஆண் நர்ஸ் ஒருவர் சுற்றும் முற்றும் பார்க்கிறார். பின்னர் திடீரென அந்த நோயாளியின் வயிற்றில் கையால் குத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனால் வலி தாங்க முடியாமல் அந்த நோயாளி எழுந்து அமர்ந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சத்தம் போட்டார்.

அவரை வேறொரு ஆண் நர்ஸ் படுக்க வைத்த நிலையில் மீண்டும் உடல் நடுங்கி அவர் எழுந்து உட்காருந்து சத்தம் போட்டார். இது தொடர்பாக அந்த நபரின் மகன் அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அதாவது தன்னுடைய தந்தையை ஒரு பிணைய கைதி போல் பிடித்து வைத்து அடித்து மிரட்டுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். அதோடு இந்த விவகாரத்தில் டாக்டர் நவீன் குமார், அவரை அடித்த ஆண் நர்ஸ் சோனு மற்றும் பாதுகாவலர் என 3 பேர் மீது அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/C8rHxXau3PB/?igsh=dnR5Z2F2b3Y3aHIx