மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். இவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதாக கூறியுள்ளார். அதோடு வெளி மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் தங்கள் பகுதியில் வசித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு தற்போது தேர்தல் ஆணையம் பதில் வழங்கியுள்ளது. அதாவது ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தால் அது போலியான வாக்காளர்கள் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதோடு ஒரே மாதிரியான எண்கள் இருந்தாலும் அவர்களின் வாக்கு சாவடி விவரங்கள் மற்றும் தொகுதி புகைப்படங்கள் போன்றவை வெவ்வேறாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும் இதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் கமிஷன் 3 மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்று கூறிய நிலையில் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவின் வாக்காளர் பட்டியல் என்பது மிகப்பெரிய ஒன்றாகும். இதில் 99 கோடிக்கும் மேல் வாக்காளர்கள் உள்ளனர். எனவே ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் பிரச்சனை தொடர்பாக தேர்தல் கமிஷன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் வாக்காளர் அடையாள அட்டை எண் எப்படி இருந்தாலும் ஒரு வாக்கு சாவடியை சேர்ந்த வாக்காளர் அந்த வாக்குசாவடியில் மட்டுமே ஓட்டு போட முடியும், வேறு எங்கும் ஓட்டு போட முடியாது என்றும், ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கொண்டிருக்கும் வாக்காளர்களுக்கு ஒரு தனித்துவமான தேசிய வாக்காளர் அடையாள அட்டை எண் வழங்கப்படும் என்றும் இந்த புதிய திட்டம் எதிர்காலத்தில் வரும் வாக்காளர்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று கூறியது.

மேலும் தொடர்ந்து வரும் இந்த பிரச்சனைக்கு தொழில் நுட்ப குழு மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்து பேசி 3 மாதங்களுக்குள் தீர்வு கொண்டு வரப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.