என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தெய்வ திருமகனார் முத்துராமலிங்க தேவர் ஐயா. அவரை பற்றி  என்ன சொல்வது ? தெய்வத்திருமகனார் தெய்வமாக மாறிய பிறகும்  கூட தன்னுடைய சொத்தை பதினாறு பங்காக பிரித்து, அதை வைத்து மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சொத்தையும் கூட செலவிட்டவர் தெய்வத்திருமானார்.

எப்பொழுதெல்லாம் தமிழகத்தில் நாத்திகம்  பேச ஆரம்பித்தார்களோ…  அப்போதெல்லாம் தமிழகத்திலே ஒரு கம்பீரமான சிம்ம குரல் நம்முடைய தெய்வ திருமகனார் முத்துராமலிங்க தேவர் ஐயாவுடைய  குரல். அப்படிப்பட்ட வீரமான மனிதன் தொடர்ந்து உங்களுக்காக பல்லாண்டு காலம் மக்களுக்காக சேவை செய்தவர்.

அவருக்கு பின்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில்  1923 ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி பிறந்த முக்கையா தேவர் அவர்கள் உங்களுக்காக தொடர்ந்து பாடுபட்டவர்.   நானும் மூக்கையா தேவர் அவருடைய 44வது குரு பூஜையை கொண்டாடிவிட்டு உசிலம்பட்டிக்கு  வந்திருக்கின்றேன். 1952 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தில் நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் 1977 வரை பெரியகுளம் உசிலம்பட்டியில் இருந்து….  உங்களுடைய சட்டமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு,  அதன் பிறகு ராமநாதபுரத்தின் உடைய பாராளுமன்றத்தில் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு… தொடர்ந்து இந்த பகுதி மக்களுக்காக பாடுபட்டவர் மூக்கையா தேவர் ஐயா  அவர்கள் தான்.

அந்த இடத்திற்கு சென்று விட்டு, உசிலம்பட்டியில் இருக்க வேண்டிய தெய்வ திருமகனார் ஐயா அவர்களுக்கும், மூக்கையா தேவர் ஐயா அவர்களுக்கும்… இன்னும் ஒரு மனிதர் அங்கே  இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐயாவினுடைய திருவுருட்சிலையும் அங்கே வந்து விட்டால்…?

இந்த மண்ணின் உடைய பெருமை என்பது இந்தியா முழுவதும் பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால் தான் நாங்கள் ஒரு வாக்குறுதியாக இங்கு இருந்து கொடுத்துவிட்டு, செல்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் 2024 இல் வரும் பொழுது நிச்சயமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐயாவினுடைய திருவுருட்சிலையை இங்கே அமைப்பதற்கு நேரடியாக நாங்கள் பாடுபட்டு நடத்திக் காட்டுவோம் என்று சொல்லுகிறோம் என தெரிவித்தார்.