
என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை கோவிலில் ஒரு தமிழ் மாநாடு போடுறாங்க. எட்டு நாள் நடக்கக்கூடிய மாநாடு. முதல் நாள் ராஜாஜி அய்யா பேசுகின்றார். இரண்டாவது நாள்… மூன்றாவது நாள்… நான்காவது நாள்…. ஒரு ஒருவர் பேசுகிறார்கள். அஞ்சாவது நாள் பி.டி ராஜன் ஐயா பேசணும். அவர் பேசுவதற்கு மேடைக்கு வருகிறார். ஆனால் மேடைக்கு வர பி.டி ராஜன் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அழைப்பிதழில் பெயரே இல்லாத அண்ணாதுரை அவர்களை கூட்டிக் கொண்டு வருகிறார்.
அண்ணாதுரை அவர்கள் மேடைக்கு போய்…. நான் இந்த மேடையில் அமர்ந்து இருந்தபோது அந்த பாப்பா அற்புதமா பாட்டு பாடினார்கள்… இதே மூடர்களா இருந்தா… அந்த பாப்பா ஞானப்பால் குடிச்சிச்சு, அதனால் தான் அப்படி பாடிச்சின்னு சொல்லுவாங்க என சொல்லுவாங்க என அண்ணாதுரை அவர்கள் பேசுறாங்க.அதுமட்டுமல்ல திருநாவுக்கரசர் ஞானப்பால் குடிசதுனால தான் இப்படிபட்ட தமிழ் காவியத்தை படைச்சாரு என சொல்லுவாங்க.
அப்படிப்பட்ட மூடர்கள் இருக்கிறார்கள். அடியே கள்ளி மீனாட்சி… மூக்குத்தி எங்கிருந்து வந்தது ? என்று கேட்கிறார். அடுத்த நாள் கோவத்தோடு முத்துராமலிங்க தேவர் ஐயா, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். பி.டி ராஜன் அவர்களும் சொல்கிறார் ஐயா நீங்கள் இன்று பேச கூடாது. நாளைக்கு தான் பேசணும் என சொன்ன போது, அவரை தள்ளிவிட்டு மேடையில் ஏறி முத்துராமலிங்க தேவர் ஐயா சொல்லுகிறார், எந்த அயோக்கிய பய கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு, மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வந்து அயோக்கிய பைய யார் என்று கேட்கிறார் ? வீரம்… அதெல்லாம் ஒரு தைரியம்…
அதற்கெல்லாம் பிறந்து வர வேண்டும். அவர் சொல்கிறார் ? மீனாட்சி அம்மைக்கு எத்தனையோ அபிஷேகம் நடக்கும். இன்னொருத்தன் யாராவது இந்த கோவிலிலுக்குள் வந்து கடவுளில் இல்லை என்று சொன்னால் ? அவனுடைய ரத்தத்திலே மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து விடுவேன் என்றார்.
முத்துராமலிங்க தேவர் ஐயா இருந்த வரைக்கும் கொட்டத்தை கொஞ்சம் அடக்கி கொண்டிருந்தார்கள். இன்று மறுபடியும் சனாதன தர்மத்தை வேரறுப்பேன், ஒழித்து கட்டுவேன் என்று ஒரு கூட்டம் கிளம்பி இருக்கு. ஆனால் இன்றைக்கு முத்துராமலிங்க தேவர் ஐயா நம்மிடம் இல்லை. அந்த தெய்வத்திருமாகனார் மறுபடியும் பிறந்து வருவாரு என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு இவர்கள் கொட்டம் அதிகமாகிவிட்டது என விமர்சனம் செய்தார்.