
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா சென்றிருந்தேன். இது அண்மையில் நடந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லிருந்தேன். அந்த மீட்டிங்கில் கூட சொல்லி இருந்தேன். என்ன சொன்னேன்னா…. நம்ம கிட்ட கூட வர மாட்டாங்க… நம்மள பார்த்தா ஒரு ஏசியன் அப்படின்னு தான் பாப்பாங்க…. இந்தியன் என அவனுக்கு தெரிய வாய்ப்பு இருக்காது…
ஏசியன் என்றால், கிட்ட கூட வந்து ஒரு சர்வீஸ் பண்ண கூட வர மாட்டாங்க… அப்புறம் நம்ம பணபலம் இருந்தால், வாங்க கூடிய சக்தி இருந்தால், மரியாதை கொடுப்பார்களே ஒழிய, இன்னைக்கு வெளிநாடு பயணம் செய்யும் போது…. இந்திய குடிமகனை பார்த்தால் உடனே சர்வீஸ் செய்ய வருகிறார்கள். அப்போ உயர்ந்த அதற்கு காரணம் யார் ? மோடி என்று நான் சொன்னேன் என பேசினார்.
இப்போது இந்தியாவினுடைய பிரதிநிதி தான் மோடியே தவிர, மொத்த இந்தியாவுக்கும் அவரால் தான் மரியாதை வந்துச்சு என்று சொல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்தியாவுக்கே மரியாதையை வந்தால்,
நாட்டின் பிரதமர் யார் என்று தான் பார்க்கிறார்கள். புரட்சித்தலைவி இருக்கிறார்களா ? புரட்சித்தலைவியால் ADMK . புரட்சித்தலைவி இல்லாம ADMK சிந்தித்துப் பார்க்க முடியாதுல்ல… மத்தவங்க ஆட்சி பண்ணிட்டு இருக்கலாம். ஆனால் எல்லாருக்கும் அந்த முகம் இருந்தால் தான், யார் இவர்களுக்கு பின்னாடி இருக்காங்க அப்படின்னு தான் பார்ப்பாங்களே ஒழிய, ஒட்டுமொத்தமாக இந்தியாவின் ரெப்ரசென்டேட்டிவ் தான் பிரதமர் என பேசினார்.