
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, இந்திய பொருளாதாரத்தின் சிந்தனை கருத்துக்களை புதிய பாதையில் கொண்டு சென்றவர் மன்மோகன் சிங். அவரது இறப்பு இந்தியாவிற்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பாகும். 24 முதல் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து முன்னேற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் மன்மோகன்சிங் தான். 20 கோடி மத்திய வர்க்கத்திற்கு முழு முதல் காரணமும் மன்மோகன் சிங் தான் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து பாமக கேட்கும் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், முறையான கணக்கெடுப்பின் மூலம் தான் உள் ஒதுக்கீடு குறித்து ஆய்வுகள் நடத்தப்படும். இதற்கான பணிகளை மேற்கொள்ள அரசு தான் துணை அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரங்களில் ஆளுநர்கள் தலையிடுவதால் அதிகமான பிரச்சனைகள் ஏற்படுகிறது என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய ஜிஎஸ்டி வரி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் மட்டும் தான் உப்பு போட்ட பொருளுக்கு ஒரு வரி, உப்பு போடாத பொருளுக்கு ஒரு வரி” என உலகத்திலேயே மிகவும் ஆச்சரியமான வரி விதிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி தாக்கல் குறித்து விமர்சித்துள்ளார்.