
திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாம் கேட்பது ஒன்றிய அரசின் அப்பன் வீட்டு சொத்தை அல்ல. நம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை தான் கேட்கிறோம். அதை கேட்டால் ஒருமையில் பேசுகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை முதலமைச்சர் மீதான அண்ணாமலையின் இந்த விமர்சனத்தை, இல்லையில்லை விசமத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.