
இந்த காலகட்டத்தில் விவசாய இல்லாமல் வெளிநாட்டிற்கு சென்று வரலாம். ஆனால் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று வர முடியாது. இந்த நிலையில் பாஸ்போர்ட் இல்லாமல் ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை காண்பித்து இரண்டு நாடுகளுக்கு சென்று வரலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
இந்தியாவுக்கு அருகில் இருக்கும் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு நாம் பாஸ்போர்ட் இல்லாமல் சென்று வரலாம். நேபாளம் இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. அங்கு அழகிய மலை பிரதேசங்கள் உள்ளது. இந்தியாவும் நேபாள நாடும் 1751 கிலோமீட்டர் தூரம் எல்கையை பகிர்ந்து கொள்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுடன் பெரும்பாலான பகுதிகளை பகிர்ந்து கொள்கிறது. நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு ரயில் சேவை இருக்கிறது.
நேபாளத்திற்கு செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை. இந்திய அரசு தந்த அடையாள அட்டை இருந்தால் போதும் ஆதார் கார்டு, அடையாள அட்டை என ஏதாவது ஒரு அரசின் அடையாள ஆவண சான்று இருந்தால் டெல்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டோவிற்கு பேருந்து மூலமும் சென்று வரலாம். பசுபதிநாத் கோவில், நீர்வீழ்ச்சிகள் என அங்கு சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளது.
பூடானும், இந்தியாவும் சுமார் 699 கிலோமீட்டர் எல்கையை பகிர்ந்து கொள்கிறது. சிக்கிம், அருணாச்சலம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுடன் பூடான் தனது எல்கையை கொண்டுள்ளது. பூடானுக்கு செல்ல பாஸ்போர்ட் தேவை இல்லை. ஏதாவது ஒரு இந்திய அரசு வழங்கிய அடையாள ஆவண சான்றிதழ் போதுமானது. பூடான் நாட்டின் நீண்ட நாட்கள் தங்கி இருக்க ஆசைப்பட்டால் அங்குள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம். அந்த நாட்டின் எல்லையிலேயே இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.