சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு கிளினிக்கில் உள்ள சோபாவில் 2 வாலிபர்கள் அமர்ந்துள்ளனர். இவர்களுடன் அங்கு husky என்ற நாயும் இருக்கிறது. இந்த நாய் முதலில், அந்த 2 வாலிபர்களுடனும் விளையாடுகிறது. அதன் பின், அதில் ஒருவருடன் மட்டும் அந்த நாய்  விளையாடுகிறது. சிறிது நேரம் கழித்து அந்த நாய் ஆக்ரோஷமாக மாறி, அவரது கையை கடிக்கிறது. இதனால் அந்த வாலிபர், நாயை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்.

இருப்பினும் அந்த நாய் சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஆக்ரோஷமாக அந்த வாலிபரின் கையை கடிக்க தொடங்குகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த வாலிபர் தனது கையை உதறுகிறார். இதையடுத்து அவர், அந்த நாயை கிளினிக்கில் இருந்து வெளியே அனுப்பி, கதவை மூடுகின்றார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.