
மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள நகரில் பேரணிகள் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கலந்து கொண்டு கூறியதாவது, மோடி பொய் வாக்குறுதி அளிக்கிறார், அதில் யாரும் சிக்க வேண்டாம். கங்கை ஆற்றில் குளித்தால் வறுமை நீங்குமா? அல்லது வயிறு நிறையுமா?. நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி எழுப்பவில்லை. யாராவது தவறாக நினைத்து இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு குழந்தை பசியால் இருக்கும்போது, பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும்போது, தொழிலாளர்களுக்கு கடன் கிடைக்காத போதும் கூட மக்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கங்கையில் நீராட போட்டி போடுகின்றனர். இப்படிப்பட்டவர்களால் நாட்டுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. எங்கள் நம்பிக்கை கடவுள் மீது உள்ளது. மக்கள் வீட்டில் தினமும் பூஜை செய்கின்றனர், அதன் பிறகு தான் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மதத்தின் பெயரைக்கொண்டு ஏழைகள் சுரண்டப்படுவது தான் எங்களுக்கு பிரச்சனை என்று அவர் கூறினார்.