
அதிமுக சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று அதிமுக சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என்று கூறப்பட்டது.
அதன்படி இன்று சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி முதலில் மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலித்தா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் இஸ்லாமியர்களை போல தொப்பி அணிந்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தார்.