
இளையராஜா தமிழ் சினிமாவில் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது ஹிட் பாடல்களை தற்போதும் ரசிகர்கள் ரசித்து கேட்டு வருகின்றனர். இதில் 81 வயதாகும் இவர் தற்போதும் இசையமைத்து வருகின்றார். சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை-2 படத்தில் அவர் இசை அமைத்து இருந்தார். இந்நிலையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது இளையராஜா ஒரு முறை மலையாள படம் ஒன்றுக்கு இசையமைத்த போது அதன் தயாரிப்பாளர் ரிலீஸ் நேரத்தில் வந்து அவரிடம் உங்களுக்கு சம்பளம் தர என்னிடம் பணம் இல்லை இதை வைத்துக் கொள்ளுங்கள் என கூறினாராம். அதை எடுத்து பார்த்த போது தயாரிப்பாளரின் மனைவியின் தாலி இருந்துள்ளது. பின்னர் இளையராஜா அவரிடம் இதனை எடுத்துக்கொண்டு கிளம்பு என கோபமாக திட்டி அனுப்பி விட்டாராம்.