விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான கூளாங்கற்களை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் சென்றுள்ளன. இந்த இரண்டு லாரிகளும் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு கூளாங்கற்களை கடத்திச் செல்ல முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுனர்கள் பன்னீர்செல்வம், பழனி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களிடமிருந்து இரண்டு லாரிகளும், கூளாங்கற்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டத்திற்கு புறம்பாக கூளாங்கற்கள் குவாரி நடத்தி வரும் உரிமையாளர்கள் இருவரை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.இசசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.