ஹைதராபாத் மாநிலம் குக்கட்பள்ளி என்ற பகுதியில் எரிவாயு நிரப்பும் நிலையம் ஒன்று சட்ட விரோதமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்தக் கடையில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் கடையின் உரிமையாளரான சங்கர்  படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் அந்த கடைக்கு வருகிறார். அதன் பின் சிலிண்டர் வெடித்ததால் அவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி செல்கிறார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு இந்த கடை சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.