விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார் என்றும், அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதோட தேர்தல் யூகங்களை வகுப்பதில் ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து ஆதவ்  அர்ஜுனா செயல்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் தவெக தலைவர் வெளியிடுவார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது, கட்சியில் ஆதார் அர்ஜுனன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து 6 மாத காலம் இடைநீக்கம் செயல்திருந்தோம். ஆனால் அவர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக கடிதம் கொடுத்தார்.

ஆகவே அவர் தானாகவே கட்சியிலிருந்து விலகினார் என்பதுதான் சரி. இந்நிலையில் கட்சியின் வழிகாட்டுதலையும், அறிவுறுத்தல்களையும் அவர் மீறினார் என்பது தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்தது. இதையடுத்து திருமாவளனிடம் செய்தியாளர் ஒருவர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய போவது உண்மைதானா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், யூகத்தின் அடிப்படையிலானது, அவர் விஜயை சந்தித்தார் என்பதை வைத்துக்கொண்டு கட்சியில் சேர உள்ளார் என்று ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டுள்ளனர். அப்படி அவர் விஜய்யுடன் இணைந்து இயங்கப் போகிறார் என்றால் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் என்று கூறினார்.

அவர் விசிக-வில் துணை பொதுச்செயலாளராக பணியாற்றினார். அவர் மிகவும் பொறுப்புணர்வோடு செயல்பட்டார், எல்லோருடமும் இணக்கமாக இருந்தார், கட்சியின் தலைமையின் மீதும் கட்சியின் மீதும் விசுவாசத்தோடு செயல்பட்டார் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே சமயம் கூட்டணி தொடர்பான மாறுபட்ட கருத்துக்களை கூறும் போது அது கட்சியின் எதிர்காலத்திற்கு நெருக்கடியாக மாறியது. எனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. ஆனால் அவர் உடனடியாக கட்சியிலிருந்து விலகுவார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் எங்களோடு தொடர்ந்து இயங்கவில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.