இந்த மாதிரி சந்தேகங்களுக்கு, எல்லாரையும் உட்கார வையுங்க பேசுங்க. உங்களுக்கு நேரம் முக்கியமில்லாம இருக்கலாம். ஆனால் எனக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம். வழக்கு கோர்ட்ல வருகிறது. அங்க நாங்க வழக்கை அழிப்பதற்கான மனு போட்டு இருக்கோம். அதுல இப்போ இவுங்க வித்ட்ரா பண்ணதையும் சேர்ப்போம். பிறகு என்ன வருதுன்னு பாத்துட்டு முடிவு பண்ணுவோம். நான் 18ஆம் தேதி வாரேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் அவங்க வந்து திரும்ப பெற்றார்கள். இதுக்கெல்லாம் நான் பயப்படற ஆளு கிடையாது.
நான் 18ஆம் தேதி வாரேன் அப்படின்னு கையெழுத்து போட்டு அந்த அழைப்பானை வாங்கும்போது கொடுத்து இருந்தேன். அதனால வரேன்… அதுக்கு பின்னாடி தான் அவங்க வழக்கை திரும்ப பெறுகிறார்கள். ஒரு நாள் காலையில ஒரு நேர்கால் கொடுக்கிறேன்…. ஊடகங்களுக்கு பதில் சொல்றேன். மாலையில் கலங்குது. என்ன நினைத்துவிட்டீர்கள் என்றால் ? புகார் கொடுத்தால் அவர் அமைதி ஆயிருவாரு. அப்படியே கைய கட்டி ஓரத்தில் போய் படுத்துடுவார் என்று நினைத்தீர்கள். புலி பதுங்குறது, பாயாத்தானே ஒழிய.. அப்படி பதுங்கிட்டே கிடப்பதற்கு கிடையாது அல்லவா ? என தெரிவித்தார்.