
பிரதமர் மோடி இன்று அரியானாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். மேலும் மின்சாரம் உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கூறியதாவது, விக்ஷித் பாரத்திற்கான தீர்வு விக்ஷித் அரியானா ஆகும். டபுள் என்ஜின் அரசால் தற்போது அரியானா டபுள் வேகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மின்தடை இருந்தது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி 2 மடங்கு அதிகரித்து உள்ளது. இந்தியா மின்சாரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் மின்சார முதல் பால் வரை போன்ற எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசு விலையை உயர்த்தியுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பொதுமக்களுக்கு துரோகம் செய்யப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் முடங்கியுள்ளதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.