
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த அரசியல் சாதாரணமான அரசியல் அல்ல தோழர்களே… இந்த அரசியல் களத்தில் இனி நாம் இன்னொரு பரிணாமத்தை எட்டியாக வேண்டும். இன்னொரு டைமென்ஷன்…. எங்களாலும் முகவர்கள் மாநாட்டை நடத்த முடியும்….. எங்களாலும் ஒரே நேரத்தில் 15,000 பேரை முகவர்களாக கொண்டு வந்து அமர்த்தி, பயிற்சி அளிக்க முடியும்……
எப்படி முடியும் ? ஆள் இல்லாம எப்படி செய்ய முடியும் ? காசு கொடுத்து கூட்டத்துக்கு கூட்டற மாதிரியா கூட்ட முடியும். இது முகவர்கள் மாநாடு… முகவர்கள் அவன் அவன் விருப்பமா வந்து…. நான் தான் ஏஜென்ட்… என்னை பதிவு செய்… என்று தன்னை தானே முன்னிறுத்தி, முகவராக பதிவு செய்து கொண்டவர்கள்..
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது…. அதுவும் ஆன்லைன்ல…. நிறைய பேருக்கு எப்படி ஆன்லைன் ஆன் பண்றதுனே தெரியாது… நீ ஆன்லைன்ல தான்டா பதிவு பண்ணனும்னு சொன்னோம்…. கட கட கட கடவென்னு 4 நாளில் 12 ஆயிரம் பேர் பதிவு பண்ணினான். தலித் அள்ளாத வாக்குச்சாவடிகளிலும் முகவர்கள் சிறுத்தைகளால் போட முடியும். போட்டு இருக்கிறோம்…
விளைஞ்சி கிடக்கு, நாம் அறுவடை செய்யவில்லை இவ்வளவு காலம்… காடு விளைந்து கிடைக்கிறது. அறுவடை செய்யவில்லை. ஒரு நல்ல விவசாயி என்பவன் விதைக்க மட்டும் கற்றுக் கொண்டால் போதாது… அதை அறுவடை செய்து, களத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்… ஆளில்லாத விவசாயம் களம் வந்து சேராதுன்னு பழமொழி….
ஆளில்லாத விவசாயம் களம் வந்து சேராது என்பது பழமொழி. விதைச்சு போட்டா விளைஞ்சிடும்… ஆள் இல்லனா காக்காயோ, குருவியோ கொத்தி தின்னுட்டு போய்டும். ஆடோ, மாடோ மேய்ச்சிட்டு போயிரும். களத்துக்கு வந்தா ஒன்னும் இருக்காது…
வெறும் தாள் தான் வரும்… ஆளில்லாத விவசாயம் களம் வந்து சேராது என்கின்ற பழமொழியை பொய்யாக்க கூடிய வகையிலே…. களம் வந்து சேர்ப்பதற்கான களப்போராளிகள் தான் நீங்கள்… அதை பாதுகாத்துக் கொண்டு வந்து…. களத்திலே கொண்டு வந்து….. சேர்க்க போகிற களப்போராளிகள் தான் நீங்கள்…. அப்ப நீங்க என்ன செய்யணும் ? தெரிவித்தார்.