
இந்தியா முழுவதும் சுமார் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் 600-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் வருடத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் (ஏப்ரல் 1) உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடி கட்டணம் 5 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.
இந்த புதிய கட்டண உயர்வு தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படும். மேலும் தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பரணுர், வானகரம், சூரப்பட்டு, செங்கல்பட்டு, பட்டரைபெரும்புதூர், சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா என பிற மாநிலங்களை நோக்கி செல்லும் பாதைகளில் உள்ள சுங்கச்சாவடிகள், மதுரை மற்றும் கோவை என பிற மாவட்ட சாலைகள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் போன்றவற்றில் புதிய சுங்கச்சாவடி கட்டணம் அமலுக்கு வருகிறது.