
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கதேச கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்றுள்ளது. காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு வருகிற 16-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் இந்த பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.