சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு மைய கண்காணிப்பாளராக திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் என்பவர் வேலையில் இருந்துள்ளார். அவர் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்காமல் லேப்டாப் பை திறந்து வைத்து படம் பார்த்தபடி வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பறக்கும் படை துணை கண்காணிப்பாளரான தனலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் ஆய்வுக்கு வந்துள்ளனர்.

தேர்வு நடக்கும் நேரத்தில் மாணவர்களை கண்காணிக்காமல் லேப்டாப் பார்த்த கண்காணிப்பாளரை அதிகாரிகள் கண்டித்தனர். மேலும் அவரிடம் இருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்து அவரை தேர்வு மையத்தில் இருந்து விடுவித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த தேர்வு மையத்திற்கு மாற்று கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார். மேலும் லேப்டாப் பார்த்த ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.