கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற மைசூர் அரண்மனை அமைந்துள்ளது. இங்கு 2 யானைகள் திடீரென சண்டை போட்டுக் கொண்டது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகிய பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அடுத்த மாதம் நாடு முழுவதும் தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு அரண்மனைக்கு கஞ்சன் மற்றும் தனஞ்ஜெயா என இரு யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த இரு யானைகளும் நேற்று முன்தினம் இரவு திடீரென சண்டை போட்டுக் கொண்டதோடு சாலை பகுதிக்கும் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.