சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேநீர் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து பார்சல் தருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து செய்தித்தாள்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். அதோடு நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது.

இதனால் அதில் வடை பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால் நமது  உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு ஏற்படுத்தும் என்று கடையின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கடையின் உரிமையாளர்களை எச்சரித்தனர்.