தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று வலுவான தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாளை முதல் வருகின்ற 7-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி உட்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.