
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் துணை எக்ஸிகியூட்டிவ் என்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் திவ்ய ஜோதி. இவர் லஞ்சம் வாங்கிய பணத்தில் வீடு, பங்களா என சொத்துக்களை குவித்துள்ளார். இதை அறிந்த அவரது கணவர் ஸ்வர்ணா ஸ்ரீபத், திவ்ய ஜோதியை தொடர்ந்து கண்டித்துள்ளார். இதை திவ்ய ஜோதி காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் ஆத்திரமடைந்த திவ்ய ஜோதியின் கணவர் இந்தியன் தாத்தாவாக வெகுண்டெழுந்து வீட்டின் பூஜையறையிலும், படுக்கை அறையிலும் மனைவி மறைத்து வைத்திருந்த 30 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் திவ்ய ஜோதியை பணி மாற்றம் செய்த நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.