இன்றைய காலத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடும் வளர்ச்சி அடைகிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போலியான பரிசுகள் வழங்குவது, ஏடிஎம் அட்டை லாக் ஆகி உள்ளது என்று கூறி பல காலமாக மோசடி நடந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்கள் மோசடி இதுபோன்று பல மோசடி நடக்கும் நிலையில், இதனை தவிர்க்க மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய யுத்தியை வெளிப்படுத்தியுள்ளது.

அதாவது இதுபோன்ற மோசடிகள் சிக்காமல் இருக்க ஆன்லைன் பரிவர்த்தனையின் போது கிரெடிட் கார்டு எண்ணை பதிவிடுவதற்கு பதிலாக கைரேகை அல்லது ஃபேஸ் கேன் மூலம் பண பரிவர்த்தனைகள் அங்கீகரிக்கப்பட மாஸ்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோன்று தற்போது செல்போன் அல்லது இமெயிலுக்கு அனுப்பப்படும் otp எண்களையும் ஹேக்கர்கள் சுலபமாக திருடுவதால் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்கின்றனர். இதனால் அந்நிறுவனம் வங்கிகளுடன் இணைந்து பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது.