
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியின் 2வது போட்டி ஆப்கானிஸ்தானுடன் இன்று நடக்கிறது. இரு அணிகள் மோதும் இந்த உலக கோப்பையின் 9வது ஆட்டம் டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 2 மணிக்கு நடக்கிறது. இந்தநிலையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் ரவி அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதேசமயம் ஆப்கான் அணியில் நவீன் உல் ஹக் இடம்பெற்றுள்ளார்..
இந்த மைதானத்தில் கடைசியாக தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆட்டத்தில் ரன் மழை பெய்தது. எனவே இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டியிலும் சிக்ஸர், பவுண்டரி என ரன்மழை பொழியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்திய அணி சென்னையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. எனவே 2வது வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி முயற்சிக்கும்.
அதே சமயம் கடைசியாக வங்கதேசத்திடம் தோல்வி அடைந்ததால், இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ய ஆப்கானிஸ்தான் அணி போராடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா லெவன் :
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்,
ஆப்கானிஸ்தான் லெவன் :
ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி,
நஜிபுல்லா சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி
🚨 Toss & Team News 🚨
Afghanistan have elected to bat against the @ImRo45-led #TeamIndia!
1⃣ change in the line-up for India as Shardul Thakur is named in the team.
A look at our Playing XI 🔽
Follow the match ▶️ https://t.co/f29c30au8u #CWC23 | #INDvAFG | #MeninBlue pic.twitter.com/Vazk9Xon0q
— BCCI (@BCCI) October 11, 2023