
இங்கிலாந்துக்கு எதிரான டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது..
இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள். மேலும் ஸ்ரேயங்கா பாட்டீல் இந்திய அணியில் அறிமுகமானார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி :
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா தாக்ஷூர். டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா மற்றும் மின்னு மணி.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி :
ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, சுபா சதீஷ், ஹர்லீன் தியோல், சைகா இஷாக், ரேணுகா தாகூர், டைட்டாஸ் சாது , மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர்.
இந்தியா-இங்கிலாந்து தொடர் அட்டவணை :
இந்தியா – இங்கிலாந்து இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து தொடரின் கடைசி 2 போட்டிகள் முறையே டிசம்பர் 9ஆம் தேதியும், டிசம்பர் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. டி20 தொடருக்கு பிறகு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 21ஆம் தேதியும் தொடங்குகிறது.
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது
இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3 ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது.இதையடுத்து இந்த தொடரின் இரண்டாவது போட்டி டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது.மேலும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெறவுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி நடக்கிறது. ஆனால் இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
India’s squad for 3 T20Is against England: H Kaur (C), S Mandhana (VC), J Rodrigues, Shafali Verma, Deepti Sharma, Y Bhatia (wk), Richa Ghosh (wk), Amanjot Kaur, Shreyanka Patil, Mannat Kashyap, Saika Ishaque, Renuka Thakur, Titas Sadhu, P Vastrakar, Kanika Ahuja, Minnu Mani.
— BCCI Women (@BCCIWomen) December 1, 2023
India’s squad for Tests against England & Australia: H Kaur (C), S Mandhana (VC), J Rodrigues, Shafali Verma, Deepti Sharma, Y Bhatia (wk), Richa Ghosh (wk), Sneh Rana, Shubha Satheesh, Harleen Deol, Saika Ishaque, Renuka Thakur, Titas Sadhu, Meghna Singh, R Gayakwad, P Vastrakar
— BCCI Women (@BCCIWomen) December 1, 2023