
நான் உலகக் கோப்பைக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன், டி20 போட்டிக்காக அல்ல என்று இந்திய அணியின் கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார்..
11 மாதங்களுக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதிக்குத் திரும்பிய இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, ஆசியக் கோப்பையிலும், இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையிலும் நீண்ட ஸ்பெல்களை வீசத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். செப்டம்பர் 2022 இல் பும்ரா இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியை விளையாடினார், அதன் பிறகு அவர் இடுப்பு எலும்பு முறிவு காரணமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ‘மிகப்பெரிய இடைவெளி’ எடுக்க வேண்டியிருந்தது.
இந்த வேகப்பந்து வீச்சாளர் தற்போது அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூலம் மீண்டும் களமிறங்குகிறார். இன்று முதல் டி 20 தொடங்கும் தொடரில் பும்ரா 4 ஓவர்கள் வீசுவார், ஆனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை மற்றும் உலக கோப்பை உட்பட 50 ஓவர் போட்டிகளுக்கு எப்போதும் தயாராகுவதே தனது திட்டம் என்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கூறினார்.
உலகக் கோப்பைக்காக நான் எப்போதும் தயாராகிக்கொண்டிருந்தேன் :
அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன் இந்திய அணியின் கேப்டன் பும்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒருநாள் உலக கோப்பை வரை டெஸ்ட் கிரிக்கெட் கிடையாது என்பது எங்களுக்கு தெரியும். மறுவாழ்வு காலத்தில் கூட டி20 போட்டிக்கு நான் தயாராகவில்லை. உலகக் கோப்பைக்காக நான் எப்போதும் தயாராகிக்கொண்டிருந்தேன். நான் உலகக் கோப்பைக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன், டி20 போட்டிக்காக அல்ல, ‘நான் 10, 12 மற்றும் 15 ஓவர்கள் கூட வீசினேன். நான் அதிக ஓவர்கள் வீசினேன், குறைந்த ஓவர்கள் வீச வேண்டியிருக்கும் போது, அது எளிதாக இருக்கும். நாங்கள் ஒரு நாள் போட்டிக்கு தயாராகி வருகிறோம், 4 ஓவர் போட்டிக்கு அல்ல என்பதை மனதில் வைத்துக்கொண்டோம்.” என்று தெரிவித்தார்..
பும்ராவின் கேரியர் இதுவரை இப்படித்தான் இருந்தது :
29 வயதான ஜஸ்பிரித் பும்ரா இதுவரை இந்தியாவுக்காக 30 டெஸ்ட், 72 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில், பும்ரா டெஸ்டில் 128 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளையும், டி20யில் 70 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
💬 💬 "Very happy to be back."
Captain Jasprit Bumrah – making a comeback – takes us through his emotions ahead of the #IREvIND T20I series. #TeamIndia | @Jaspritbumrah93 pic.twitter.com/IR9Rtp26gi
— BCCI (@BCCI) August 17, 2023