
அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது..
அயர்லாந்து அணி தனது சொந்த மண்ணில் மீண்டும் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு தொடக்க ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது..
இப்போது தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி டப்ளினில் ஆகஸ்ட் 23 அன்று நடைபெறவுள்ளது. 2வது போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் இலக்கை நிர்ணயித்திருந்தது, பின் ஆடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரிங்கு சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்..

இந்திய அணியை பொறுத்தவரையில் அயர்லாந்துக்கு எதிரான 3வது டி20 தொடர் இதுவாகும். மூன்றிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த 3 தொடர்களிலும் இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் அயர்லாந்தை வீழ்த்தியது தான் சிறப்பு..
ருதுராஜ் மற்றும் சஞ்சு வலுவான இன்னிங்ஸ் விளையாடினர் :
இப்போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மேலும் கடைசியில் அதிரடியாக ரிங்கு சிங் 21 பந்துகளில் (2 பவுண்டரி, 3 சிக்ஸர்) 38 ரன்களும், சிவம் துபே ஆட்டமிழக்காமல் 22 ரன்களும் எடுத்தனர்.
அயர்லாந்தின் பேரி மெக்கார்த்தி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்களைத் தவிர மார்க் அடேர், கிரேக் யங், பென் ஒயிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த பந்துவீச்சாளர்கள் அனைவரும் இந்திய அணியை சிறிய ஸ்கோருக்கு கட்டுப்படுத்த தவறினர். மேலும் ஜோஷ் லிட்டில் 4 ஓவரில் 48 ரன்களை கொடுத்தார்..
இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் :
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ பால்பிர்னி அபாரமாக பேட்டிங் செய்து 51 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அதேசமயம் கேப்டன் பால் ஸ்டெர்லிங் மற்றும் லோர்கன் டக்கர் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர்..
இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 19 ரன்களில் அயர்லாந்து முதல் 2 விக்கெட்டுகளை இழந்தது. வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் கேப்டன் பால் ஸ்டெர்லிங்கையும், லோர்கன் டக்கரையும் வெளியேற்றினார்..
இதன் பிறகு மூன்றாவது அடியாக ஹாரி டெக்டர் 7 ரன்களில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் வீழ்த்தினார். 63 ரன்களுக்கு அயர்லாந்துக்கு 4வது அடி கிடைத்தது. ரவி பிஷ்னோய் கர்டிஸ் கேம்ஃபரை 2வது விக்கெட்டாக எடுத்தார்.. கர்டிஸ் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இங்கிருந்து அயர்லாந்து அணியால் மீள முடியவில்லை. ஜார்ஜ் டோக்ரெல் (13), பால்பிர்னி (72), மெக்கார்த்தி (2), அடேர் (23) அடுத்தடுத்து அவுட் ஆக இந்தப் போட்டியையும் இந்தியா கைப்பற்றியது.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து இன்னும் வெற்றி பெறவில்லை :
அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணியின் சாதனை சிறப்பாக உள்ளது. இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. இந்தியா – அயர்லாந்து இடையே இதுவரை மொத்தம் 7 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்த போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றால், அது இந்தியாவுக்கு எதிரான முதல் மற்றும் வரலாற்று வெற்றியாகும்.
For his crucial and entertaining knock down the order, Rinku Singh receives the Player of the Match award 👏👏#TeamIndia complete a 33-run victory in Dublin 🙌
Scorecard ▶️ https://t.co/vLHHA69lGg#IREvIND | @rinkusingh235 pic.twitter.com/OhxKiC7c3h
— BCCI (@BCCI) August 20, 2023