
நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இரு இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 மற்றும் 255 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முறையே 156 மற்றும் 245 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 3 தொடர்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் பவுலர்கள் சிறப்பான முறையில் ஆடினாலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். இதன் காரணமாக 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா தோல்வியை சந்தித்தது. மேலும் கிட்டதட்ட 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் மீண்டும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.