
தந்தையான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஷஹீன் அப்ரிடி பரிசு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டிகளுக்கு இடைவிடாத மழை இடையூறு ஏற்படுத்தி வருகிறது. போட்டி முழுவதும் இலங்கை தலைநகரில் நடைபெறும் நிலையில், அங்கு மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நேற்று நடைபெற்ற சூப்பர் 4 போட்டி டிரா ஆனது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி களமிறங்கி சிறப்பாக ஆடியது. பிரேமதாசா ஸ்டேடியத்தில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படும் வரை, இந்தியா 24.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. இப்போட்டி இங்கிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்குஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொழும்பில் மழை பெய்துவருவதால் போட்டி தொடங்க தாமதமாகியுள்ளது. இன்று போட்டி நடக்குமா?நடக்காதா? என தெரியாத நிலையில், இந்திய அணி நாளை அடுத்த சூப்பர் ஃபோர் போட்டியில் இலங்கையுடன் விளையாட வேண்டும்.
ஷஹீன் பும்ராவுக்கு பரிசு வழங்கினார் :
இந்தியாவும் பாகிஸ்தானும் களத்தில் ஆக்ரோஷமாக போட்டியிட்டாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வெளியே சககமாக பழகி வருகின்றனர். அதற்கு சாட்சியாக ஒரு சம்பவம் நடந்து ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டர் எக்ஸில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு பெட்டியை ஒப்படைப்பதைக் காணலாம். ஜஸ்பிரித் பும்ரா தந்தை ஆனதற்கு அப்ரிடி வாழ்த்து தெரிவித்தார். இதன் போது அவர்களிடையே ஒரு சிறிய உரையாடலையும் காணலாம். வீடியோவின் தலைப்பு, ‘சந்தோஷம் பரவியது, ஷாஹீன் அப்ரிடி தந்தையானவுடன் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு புன்னகையைக் கொடுத்தார் (ஷாஹீன் அப்ரிடி ஒரு தந்தையாக இருந்ததற்காக பும்ராவைப் பரிசளித்தார்), அதாவது, அவர் அவரை வாழ்த்தினார். அதற்கு பும்ரா நன்றி சொன்னார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஷஹீன் ஷா அப்ரிடி ட்விட்டர் எக்ஸில், அன்பும் அமைதியும். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் உங்கள் குழந்தையின் பிறப்பு பற்றிய குடும்பத்திற்கு வாழ்த்துக்கள். முழு குடும்பத்திற்கும் பிரார்த்தனைகள். நாங்கள் களத்தில் போராடுகிறோம். களத்திற்கு வெளியே நாங்கள் உங்கள் வழக்கமான மனிதர்கள்”என தெரிவித்தார். இந்த பதிவிற்கு கீழே பும்ரா, அழகான சைகை, நானும் எனது குடும்பத்தினரும் அன்பால் மூழ்கிவிட்டோம்! எப்போதும் வாழ்த்துக்கள் ஷஹீன் ஷா அப்ரிடி என கமெண்ட் செய்தார்.
தற்போது இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே விராட் கோலி (8), கே.எல்.ராகுல் (17) கிரீஸில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (56), ஷுப்மான் கில் (58) அரைசதம் அடித்து பெவிலியன் திரும்பினர். முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை குரூப் போட்டியும் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Beautiful gesture, my family and I are overwhelmed with the love! Best wishes always.🤗 @iShaheenAfridi
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) September 11, 2023
Spreading joy 🙌
Shaheen Afridi delivers smiles to new dad Jasprit Bumrah 👶🏼🎁#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/Nx04tdegjX
— Pakistan Cricket (@TheRealPCB) September 10, 2023