
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனையடுத்து இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் துபாயில் நடக்கிறது. இன்று போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பாகிஸ்தான் வெற்றிக்காக கடுமையாக போராடும். பாகிஸ்தான் கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாக இருந்தால் இந்திய அணியும் அதே போல கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டம் துபாயிலுள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கிறது.
இதில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் துணை கேப்டன் சுப்மன் கில் இருக்கிறார். அவர் கடந்த நான்கு ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 2 அரைசதம், இரண்டு சதம் அடித்தார். கேப்டன் ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். விராட் கோலி தொடர்ந்து தடுமாற்றத்தை கண்டு வருகிறார். அவர் கணிசமாக பங்களித்தால் மேலும் வலுவடையலாம். கோலி இன்னும் 15 ரன்கள் எடுத்தாலும் ஒரு நாள் போட்டியில் 14 ஆயிரம் ரன்களை எடுத்த வீரராக சாதனை படைப்பார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதி நெருங்கிவிடலாம் என்று இந்திய அணி தீவிரமாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அரையிறுதியில் நீட்டிப்பதற்காக பாகிஸ்தான் அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.