
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது “2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப் பெரிய வெற்றி என்று உலகமே நம்புகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸால் 100 இடங்களைக் கூட தொட முடியவில்லை. இண்டியா கூட்டணி மெதுவாக மூழ்கிக்கொண்டிருந்ததை தேர்தலின்போது நான் தெளிவாகக் கண்டேன். இனி அவர்கள் வேகமாக மூழ்குவார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் பிரேக்கிங் செய்திகளை நம்பி இந்த நாடு செயல்படாது என கூட்டணி கட்சிகளுக்கு இலாகா ஒதுக்கீடு கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், 140 கோடி மக்களின் கனவை நிறைவேற்றுவேன் என்றும் நடுத்தர மக்களின் சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்தார்.