இந்திய கிரிக்கெட் அணி, ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவில் விளையாட பயந்து கொண்டிருந்த நிலை மாறி, தற்போது அங்கு தன்னம்பிக்கையுடன் விளையாடுவதற்கு விராட் கோலியின் கேப்டன்ஷிப் முக்கிய காரணம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் தன்னம்பிக்கை மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டுதான் என்று பாண்டிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் போன்ற டி20 தொடர்களால் இந்திய இளம் வீரர்கள் அழுத்தமான போட்டிகளில் விளையாட பயப்படுவதில்லை என்றும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்றும் பாண்டிங் தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் கேப்டன்ஷிப் இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது என்றும், ரோகித் சர்மா தலைமையில் அந்த பாரம்பரியம் தொடர்ந்து வருவதாகவும் பாண்டிங் கூறியுள்ளார்.