
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் (வெள்ளி, வெண்கலம்) கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் 19 வயதே ஆன இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கல் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மல்யுத்தத்தில் மகளிருக்கான 53 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் 19 வயதே ஆன இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கல் வெண்கலம் வென்றார். ஆண்டிம், ஒலிம்பிக் மற்றும் உலகப் பதக்கம் வென்ற மங்கோலியாவின் பேட்-ஓச்சிர் போலோர்டுயாவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
முன்னதாக ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் சௌரவ் கோசல் வெள்ளி வென்று அசத்தியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் சவுரவ் 1-3 என முதல் நிலை வீரரிடம் தோற்றதால் வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. மலேசியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் சௌரவ் கோசல் வெள்ளிப் பதக்கம் வென்றதால், ஐன் யோவ் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 21 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 86 பதக்கங்களை வென்று இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
News Flash: Bronze medal for Antim Panghal
Antim did in style beating Olympic & World medalist Bat-Ochir Bolortuya of Mongolia 3-1.
86th Medal for India📸 @wrestling #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/YXxfBpKCXx
— India_AllSports (@India_AllSports) October 5, 2023
2022 Hangzhou 🥈
2018 Jakarta 🥉
2014 Incheon 🥈
2010 Guangzhou 🥉
2006 Doha 🥉He has won Squash Singles medal in every edition of Asian Games since 2006 + 4 Team medals alongside (2G | 2B)
Saurav Ghosal | 37 yrs ❤️ #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/TeMMkyLQrt
— India_AllSports (@India_AllSports) October 5, 2023