
இஸ்ரோவில் உயர் பதவிகளில் இருந்து சாதனை படைத்து வரும் பல விஞ்ஞானிகள் தமிழ் வழியில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாட்டின் கல்வித் தரம் முழுமையாக தெரியுமா என்றும் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் மாநில பாடத்திட்டத்தில் படித்த மயில்சாமி அண்ணாதுரை, சிவன் உள்ளிட்ட பலரும் இஸ்ரோவில் உயர் பதவிகளை அடைந்து சாதனை படைத்துள்ளனர். தற்போது பணியில் உள்ள வீரமுத்துவேல், வனிதா, நிகர் ஷாஜி, நாராயணன், ராஜராஜன், சங்கரன் உள்ளிட்ட பலரும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே.
ஆளுநர், மாநில பாடத்திட்டத்தை விட CBSE பாடத்திட்டம் தரமானது என்ற கருத்தை முன்வைத்திருந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவின் இந்த கருத்து, மாநில பாடத்திட்டத்தின் தரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை, தமிழ்நாட்டின் கல்வி முறையின் தரத்தை நிரூபிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.