
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அதன்பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அமெரிக்காவில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி படித்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு வருடந்தோறும் ரூ.69 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய கல்வியாளர்கள் கூறியதாவது, அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அதில் 4000-த்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இதில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது அங்கு இந்திய மாணவர்கள் தான் அதிகமாக உள்ளனர். இவர்கள் மூலம் ஆண்டு தோறும் ரூ.69 ஆயிரம் கோடி கிடைப்பதாக அந்நாட்டு அரசு கணக்கிட்டு உள்ளது. ஆனால் இந்திய மாணவர்களால் அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1,213,35 கோடி வரை வருவாய் கிடைப்பதாக தனியார் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர் என்று கூறினார்.