ஆஸ்திரேலிய அணி இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் தற்போது 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்து இருந்தது.

அதன் பிறகு நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இன்று 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் கில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதில் அவர் குறிப்பாக ஸ்டார்க் ஓவர்களில் அதிரடியாக ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டார்க் ஓவர்களில் அவுட் ஆகாமல் அதிக ரன்கள் (மொத்தம் 125) அடித்த வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். மேலும் தற்போது வரை கில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்.